Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

யாழில் 7 வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு; 17 வயது உறவினர் கைது

31 Jul 2026, 02:34 PM
பார்வைகள்: 137
யாழில் 7 வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு; 17 வயது உறவினர் கைது

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் 7 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், 17 வயதுடைய அவரது உறவினர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான தகவலின்படி, பாடசாலையிலிருந்து சிறுமியை அழைத்து வந்த குறித்த இளைஞர், "மீன் காட்டுவதாக" கூறி ஆட்கள் நடமாட்டம் இல்லாத பற்றைப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், சிறுமி இந்த சம்பவம் குறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.