Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்; ஊடகத் தாக்குதல்களுக்கு நீதி கோரிக்கை

31 Jul 2026, 02:45 PM
பார்வைகள்: 119
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்; ஊடகத் தாக்குதல்களுக்கு நீதி கோரிக்கை

ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்கக் கோரி, யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (31) ஊடகவியலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், தாக்குதலுக்கு உள்ளான ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் சுயாதீனமும் நீதியானதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

இதேவேளை, இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தார்.

எனினும், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, யாழ் ஊடக மையத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் குறித்த நிகழ்வை புறக்கணித்து, மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.