Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

மட்டக்களப்பில் வீடொன்றில் தீ விபத்து: மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட உடைமைகள் தீக்கிரை

01 Aug 2026, 06:49 PM
பார்வைகள்: 139
மட்டக்களப்பில் வீடொன்றில் தீ விபத்து: மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட உடைமைகள் தீக்கிரை

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் 5ஆம் குறிச்சிப் பகுதியில் இன்று (1) காலை ஏற்பட்ட தீ விபத்தில், வீடொன்றின் ஒரு பகுதி சேதமடைந்ததுடன், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் முற்றிலும் தீக்கிரையாகின.

இன்று காலை திடீரென வீட்டின் ஒரு பகுதியில் தீப்பற்றியதை அவதானித்த வீட்டினர், அயலவர்களின் உதவியுடன் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், மின்சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், பாடசாலை சீருடைகள் உள்ளிட்ட பல உடைமைகள் தீயில் எரிந்து நாசமாகின.

அதிர்ஷ்டவசமாக, இந்தச் சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.