Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

அஸ்வெசும கொடுப்பனவு மோசடி: 29இலட்சத்து 89ஆயிரத்து 500ரூபாய் கையாடல் குற்றச்சாட்டில் இரு பெண் உத்தியோகத்தர்கள் கைது

01 Aug 2026, 06:55 PM
பார்வைகள்: 105
அஸ்வெசும கொடுப்பனவு மோசடி: 29இலட்சத்து 89ஆயிரத்து 500ரூபாய் கையாடல் குற்றச்சாட்டில் இரு பெண் உத்தியோகத்தர்கள் கைது

அஸ்வெசும கொடுப்பனவு திட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் நிதி மோசடி தொடர்பில், நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய இரு பெண் உத்தியோகத்தர்கள் ஹட்டன் விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று (31) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, 2025ஆம் ஆண்டு முதல் இதுவரை ரூ.29 இலட்சத்து 89 ஆயிரத்து 500 தொகையை மோசடி செய்துள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவுகளில் முறைகேடுகள் இடம்பெற்றதாக கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, மாவட்ட செயலாளரின் நேரடி அறிவுறுத்தலின் பேரில் நோர்வூட் பிரதேச செயலக அதிகாரிகள் இருவருக்கு எதிராக விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், குறித்த இரு உத்தியோகத்தர்களும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டிருந்ததாகவும், அவர்களில் ஒருவர் அம்பகமுவ பிரதேச செயலகத்துக்கும் மற்றையவர் தலவாக்கலை பிரதேச செயலகத்துக்கும் மாற்றப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.