Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

மஹர சிறைச்சாலை பதற்றம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அவசர தலையீடு கோரி விண்ணப்பம்

02 Aug 2026, 09:35 AM
பார்வைகள்: 178
மஹர சிறைச்சாலை பதற்றம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அவசர தலையீடு கோரி விண்ணப்பம்

மஹர சிறைச்சாலைக்குள் சட்டப்பூர்வமாக பிரவேசிக்கும் அதிகாரம் தற்போது மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இருப்பதால், எவ்வித தாமதமுமின்றி விசேட குழுவொன்றை உடனடியாக அங்கு அனுப்பி வைக்குமாறு சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு (CPRP) அவசரக் கோரிக்கை விடுத்துள்ளது.

மஹர சிறைச்சாலையில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து, சிறைச்சாலை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் ஆயுதமேந்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், சிறைச்சாலைக்கு முன்பாக திரண்டிருந்த கைதிகளின் உறவினர்கள் மற்றும் பிரதேசவாசிகள், பாதுகாப்பு தரப்பினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறைச்சாலையின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, தனது சட்டப்பூர்வ அதிகாரத்தைப் பயன்படுத்தி மனித உரிமைகள் ஆணைக்குழு உடனடியாகத் தலையிட வேண்டும் என CPRP வலியுறுத்தியுள்ளது.

மேலும், இந்த விடயம் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் சிறைச்சாலை விவகாரங்களுக்கான பணிப்பாளர் சந்திக லொகுஹெட்டி ஆகியோரின் அவசர கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலையிலுள்ள கைதிகளின் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, நிலைமையின் வெளிப்படைத்தன்மையையும் பேணும் வகையில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.