Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

சுவர் இடிந்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி

02 Aug 2026, 12:19 PM
பார்வைகள்: 129
சுவர் இடிந்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி

மட்டக்களப்பு ஜெயந்திபுரத்தைச் சேர்ந்த 28 வயதுடைய கே. டிலெக்ஸன், கடந்த ஜூலை 29 ஆம் தேதி காத்தான்குடி புதிய காத்தான்குடி ஆறாம் குறிச்சி நூறானிய்யா ஜும்ஆப் பள்ளிவாசல் பகுதியில் பகுதி நேர தச்சுத் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார்.

இந்த நிலையில், உயிரிழந்த டிலெக்ஸனின் குடும்பத்தினரை நூறானிய்யா ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் தலைவர் பாயில் ஹாஜியார் தலைமையில் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அத்துடன், பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பில் ரூ.1 லட்சமும், கத்தாரில் இயங்கும் Q Cargo நிறுவனத்தின் சார்பில் மேலும் ரூ.1 லட்சமும் வழங்கப்பட்டு, மொத்தம் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பள்ளிவாசல் நிர்வாகிகள், இமாம்கள், Q Cargo நிறுவன பிரதிநிதிகள், சர்வமத செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வில் கலந்துகொண்ட அப்பகுதி இந்து ஆலய குரு, இந்த மனிதாபிமான உதவியை இன நல்லுறவு மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் முன்மாதிரியான செயற்பாடாக பாராட்டினார்.