Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீட்டிப்பு

04 Aug 2026, 12:26 PM
பார்வைகள்: 171
மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீட்டிப்பு

நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் மழையுடனான வானிலையை முன்னிட்டு, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு விடுத்திருந்த மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கையை நாளை (05) காலை 9.00 மணி வரை நீடித்துள்ளது.

சிவப்பு எச்சரிக்கை அமுலில் உள்ள பகுதிகள் வருமாறு:

  • கண்டி மாவட்டம் – கங்க இஹள கோரளை, உடுதும்பர மற்றும் பஸ்பாகே கோரளை.
  • கேகாலை மாவட்டம் – யட்டியாந்தோட்டை.
  • நுவரெலியா மாவட்டம் – அம்பகமுவ மற்றும் நோர்வூட்.

இதனுடன், மண்சரிவு அபாயத்தை கருத்தில் கொண்டு எச்சரிக்கை மட்டம்–2 மற்றும் எச்சரிக்கை மட்டம்–1 ஆகிய நிலைகளிலும் பல பகுதிகளுக்கு எச்சரிக்கைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

எச்சரிக்கை மட்டம்–2

கண்டி மாவட்டம்: பன்வில, மெததும்பர, உடபலாத, தொலுவ மற்றும் தெல்தோட்டை.

கேகாலை மாவட்டம்: அரநாயக்க, தெரணியாகலை, தெஹிஓவிட்ட மற்றும் புலத்கோஹுபிட்டிய.

நுவரெலியா மாவட்டம்: தலவாக்கலை, நுவரெலியா, கொத்மலை கிழக்கு மற்றும் கொத்மலை மேற்கு.

இரத்தினபுரி மாவட்டம்: இரத்தினபுரி, ஓப்பநாயக்க மற்றும் இம்புல்பே.

எச்சரிக்கை மட்டம்–1

கேகாலை மாவட்டம்: கேகாலை.

நுவரெலியா மாவட்டம்: ஹங்குரன்கெத்த.

இரத்தினபுரி மாவட்டம்: நிவிதிகல மற்றும் குருவிட்ட.

மண்சரிவு அபாயம் நிலவும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.