Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

சிறுவர் உரிமைகள் சட்டம் உருவாக்க அமைச்சரவை ஒப்புதல்

05 Aug 2026, 10:23 AM
பார்வைகள்: 105
சிறுவர் உரிமைகள் சட்டம் உருவாக்க அமைச்சரவை ஒப்புதல்

நாட்டிலுள்ள சிறுவர்களின் உரிமைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ‘சிறுவர் உரிமைகள் சட்டம்’ என்ற புதிய சட்டமூலத்தை விரைவாகத் தயாரிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் உள்ளடக்கும் வகையில் புதிய சட்டம் அவசியம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதற்காக, 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி 19 ஆம் திகதி அமைச்சரவை வழங்கிய அனுமதியைத் தொடர்ந்து, சட்ட வரைவாளர் சட்டமூலத்தைத் தயாரிக்கும் பணிகளை ஆரம்பித்திருந்தார்.

மேலும், ஆரம்பத்தில் ‘சிறுவர் உரிமைகள் தொடர்பான கூட்டிணைப்புச் சட்டம்’ எனப் பெயரிடப்பட்டிருந்த சட்டமூலத்தின் பெயரை ‘சிறுவர் உரிமைகள் சட்டம்’ என மாற்றவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, கருத்தாக்கப் பத்திரத்தில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள விடயங்களையும் சட்டமூலத்தில் உள்ளடக்கி, அதனை விரைவாகத் தயாரிக்க சட்ட வரைவாளருக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.