Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

16 வயது மாணவி பிரசவம்; உயிரிழந்த சிசு – இளைஞர் மீது வழக்குப்பதிவு

05 Aug 2026, 11:53 AM
பார்வைகள்: 168
16 வயது மாணவி பிரசவம்; உயிரிழந்த சிசு – இளைஞர் மீது வழக்குப்பதிவு

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது 10ஆம் வகுப்பு மாணவி ஒருவர் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாட்டி வீட்டில் வசித்து வந்த அந்த மாணவிக்கு, சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் 25 வயதுடைய இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் அவர் கர்ப்பமடைந்ததாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தன்று பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவி திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்ததால் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது கர்ப்பம் உறுதி செய்யப்பட்டது.

பின்னர் வீட்டில் இருந்தபோதே மாணவிக்கு பிரசவம் ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் மாணவியையும் பிறந்த சிசுவையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, சிசு ஏற்கனவே உயிரிழந்திருந்தது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மாணவியுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் 25 வயது இளைஞர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.