Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

குருவிட்ட சிறைச்சாலையில் பதற்றம்: இருவர் உயிரிழப்பு; 12 பேர் காயம்

07 Aug 2026, 10:49 AM
பார்வைகள்: 151
குருவிட்ட சிறைச்சாலையில் பதற்றம்: இருவர் உயிரிழப்பு; 12 பேர் காயம்

இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையால் இரு கைதிகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் தகவலின்படி, நேற்றிரவு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. எனினும், இன்று (7) காலை மீண்டும் கைதிகள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டதால் சிறைச்சாலைக்குள் பதற்றமான சூழல் நிலவியது.

இந்தச் சம்பவத்தின் போது சிறைச்சாலைக்குள் உள்ள வைத்தியசாலைக்கும் கைதிகள் சேதம் விளைவித்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், மேலும் தகவல்கள் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.