Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

அலவ்வ பகுதியில் துயரச் சம்பவம்: மின்சாரத் தாக்குதலில் 33 வயது பெண் உயிரிழப்பு.

15 Jun 2026, 12:26 PM
பார்வைகள்: 208
அலவ்வ பகுதியில் துயரச் சம்பவம்: மின்சாரத் தாக்குதலில் 33 வயது பெண் உயிரிழப்பு.

அலவ்வ: அலவ்வ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், காணி ஒன்றுக்கு அருகில் 33 வயது பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நேற்று (14) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், அலவ்வ பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் காணிக்குள் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளின் படி, குறித்த காணியில் பயிரிடப்பட்டிருந்த மரவள்ளிக்கிழங்கு பயிர்களை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்க சட்டவிரோதமாக மின்சாரக் கம்பிகள் பொருத்தப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

தேங்காய் பொறுக்குவதற்காக காணிக்குள் நுழைந்த போது, அந்த மின்சாரக் கம்பியில் சிக்கி மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.இந்த சம்பவம் தொடர்பில், மனிதக் கொலை சந்தேகத்தின் பேரில் காணியின் காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.சடலம் குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அலவ்வ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.