Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

நாடு முழுவதும் இன்று கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கை

10 Aug 2026, 10:18 AM
பார்வைகள்: 141
நாடு முழுவதும் இன்று கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கை

பயணக் கொடுப்பனவை அதிகரிக்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கிராம உத்தியோகத்தர்கள் இன்று (10) மற்றும் நாளை (11) நாடு முழுவதும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

இதன்படி, கிராம உத்தியோகத்தர்கள் நோய் விடுப்பைப் பதிவு செய்து சேவையில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (09.08.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

8 ஆண்டுகளாக அதிகரிக்கப்படாத கொடுப்பனவு

கிராம உத்தியோகத்தர்களுக்கு தற்போது வழங்கப்படும் 600 ரூபாய் பயணக் கொடுப்பனவு கடந்த 8 ஆண்டுகளாக அதிகரிக்கப்படவில்லை என நந்தன ரணசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, 2024ஆம் ஆண்டில் குறித்த பயணக் கொடுப்பனவுக்குப் பதிலாக 20 லீற்றர் எரிபொருளுக்கு சமமான கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தும் இதுவரை அந்தக் கொடுப்பனவு நடைமுறைப்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்து, தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, இன்று (10) மற்றும் நாளை (11) நாடு முழுவதும் கிராம உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.