Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

மாத்தளையில் மாமனாரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த மருமகன்(சந்தேகநபருக்கு வலைவீச்சு)

11 Aug 2026, 10:18 AM
பார்வைகள்: 122
மாத்தளையில் மாமனாரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த மருமகன்(சந்தேகநபருக்கு வலைவீச்சு)

மாத்தளை மாவட்டத்தின் லக்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோரப்பிட்டிய சந்திக்கு அருகில் 78 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

காயங்களுடன் நபர் ஒருவர் வீதியில் வீழ்ந்து கிடப்பதாக லக்கல பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குறித்த நபரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் மாஓய, கிராமம் 01 பகுதியைச் சேர்ந்த 78 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்தவருக்கும் அவரது மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு முற்றியதைத் தொடர்ந்து, மருமகன் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவத்தையடுத்து சந்தேகநபர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்காக லக்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.