Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு: உயர் நீதிமன்ற தீர்ப்பை யாழ் மேல் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது

16 Jun 2026, 10:12 AM
பார்வைகள்: 158
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு: உயர் நீதிமன்ற தீர்ப்பை யாழ் மேல் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்று (15) மீண்டும் உறுதிப்படுத்தியது. அதேவேளை, உயர் நீதிமன்றத்தால் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்ட இருவரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது.கடந்த 2015 மே 13ஆம் திகதி, பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த புங்குடுதீவு மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கில், ஏழு பேரை குற்றவாளிகளாகக் கண்ட ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் அவர்களுக்கு மரண தண்டனை விதித்திருந்தது.

இத்தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இருவரை விடுவித்ததுடன், ஏனைய ஐவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதிப்படுத்தியது.எனினும், வழக்கு விசாரணை காலத்தில் ஒருவரும், கடந்த மாதம் சிறையில் மற்றொருவரும் உயிரிழந்த நிலையில், தற்போது உயிருடன் உள்ள மூன்று குற்றவாளிகளுக்கு உயர் நீதிமன்றத் தீர்ப்பு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வாசித்துக் காட்டப்பட்டு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், விடுவிக்கப்பட்ட இருவரையும் நீதிமன்றம் உத்தியோகபூர்வமாக விடுதலை செய்தது.