Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

உயர்தரப் பரீட்சை அட்டவணைக்கு எதிர்ப்பு

16 Jun 2026, 10:18 AM
பார்வைகள்: 166
உயர்தரப் பரீட்சை அட்டவணைக்கு எதிர்ப்பு

2026ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை ஆகஸ்ட் மாதத்தில் நடத்தும் தீர்மானம் மாணவர்களுக்கு போதுமான தயாரிப்பு காலத்தை வழங்கவில்லை எனக் கூறிய பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில, பரீட்சை தினத்தை பிற்போட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், குறிப்பாக இரண்டாம் மற்றும் மூன்றாம் தடவையாக பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறைவான கால அவகாசமே வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.மாணவர்களுக்கு சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதைக் குறிப்பிட்ட அவர், தற்போதைய அட்டவணை சமத்துவ உரிமையை பாதிக்கும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்தார். எனவே, பரீட்சை தினத்தை மீளாய்வு செய்து போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் சட்ட நடவடிக்கைகள் குறித்து பரிசீலிக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.