Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

இன்று நள்ளிரவு முதல் புதிய எரிபொருள் விலை..

31 Aug 2026, 09:43 AM
பார்வைகள்: 96
இன்று நள்ளிரவு முதல் புதிய எரிபொருள் விலை..

இன்று நள்ளிரவு (30) முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஒரு லீற்றர் ஒக்டேன் 95 பெட்ரோலின் விலை ரூ.20ஆல் குறைக்கப்பட்டு ரூ.475 ஆகவும், ஒரு லீற்றர் ஒக்டேன் 92 பெட்ரோலின் விலை ரூ.15ஆல் குறைக்கப்பட்டு ரூ.399 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஏனைய வகை எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

புதிய எரிபொருள் விலைகள்

 

🔸 ஒக்டேன் 95 பெட்ரோல் – ரூ.475
🔹 ஒக்டேன் 92 பெட்ரோல் – ரூ.399

 

இந்த விலைத் திருத்தம் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருகிறது.