Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

யாழில் 11 லட்சத்திற்கு போட்டி போட்டு ஏலம் எடுக்கப்பட்ட மாம்பழம்!

03 Sep 2026, 11:48 AM
பார்வைகள்: 139
யாழில் 11 லட்சத்திற்கு போட்டி போட்டு ஏலம் எடுக்கப்பட்ட மாம்பழம்!

யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள முருகையா தேவஸ்தானத்தின் வருடாந்த பெருந்திருவிழாவையொட்டி நடைபெற்ற மாம்பழத் திருவிழாவில், மாம்பழம் ஒன்று 11 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

நாகர்கோவில் பகுதியில் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயமாக விளங்கும் முருகையா தேவஸ்தானத்தின் வருடாந்த பெருந்திருவிழா சிறப்பாக இடம்பெற்ற நிலையில், அதன் ஒரு பகுதியாக மாம்பழத் திருவிழாவும் நடைபெற்றது.

இதன்போது, மாம்பழம் ஒன்று பக்தர்களிடையே போட்டி போட்டு ஏலம் விடப்பட்ட நிலையில், 11 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது.

கடந்த வருடம் இதே ஆலயத்தில் மாம்பழம் ஒன்று 10 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டிருந்த நிலையில், இம்முறை அந்தத் தொகையை விட அதிகமாக 11 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.

மாம்பழ ஏலத்தின் மூலம் கிடைத்த நிதி ஆலயத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.