Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

தேயிலைத் தோட்டத்தில் பெண் தொழிலாளியை தாக்கிய சிறுத்தை

05 Sep 2026, 11:06 AM
பார்வைகள்: 145
தேயிலைத் தோட்டத்தில் பெண் தொழிலாளியை தாக்கிய சிறுத்தை

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெரேசியா தோட்டத்தில் தேயிலை கொழுந்து கொய்துகொண்டிருந்த பெண் தொழிலாளர் ஒருவர் சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (04) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேயிலை கொழுந்து கொய்துகொண்டிருந்தபோது, புதருக்குள் இருந்து திடீரென வெளியேறிய பெரியளவிலான சிறுத்தை ஒன்று குறித்த பெண் தொழிலாளியைத் தாக்கியுள்ளது. இதில் அவரது கழுத்து மற்றும் கைகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

சிறுத்தையின் தாக்குதலில் நிலத்தில் விழுந்த பெண் தொழிலாளியின் அலறல் சத்தத்தைக் கேட்ட அருகிலிருந்த ஏனைய தொழிலாளர்கள் கூச்சலிட்டதைத் தொடர்ந்து, சிறுத்தை அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

காயமடைந்த பெண் முதலில் பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வளர்ப்பு நாய்களைத் தோட்டங்களுக்கு அழைத்துச் செல்வதால், அவற்றை இரையாக்குவதற்காக சிறுத்தைகள் குறித்த பகுதிகளுக்கு வருவதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாய்களை வேட்டையாடும்போது ஏற்படும் தடைகளால், அவற்றுக்கு அருகில் காணப்படும் மனிதர்களை சிறுத்தைகள் தாக்கிவிட்டு தப்பிச் செல்லும் சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.