Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

எல் நினோ தாக்கம்: 8 மாவட்டங்களில் 49,344 குடும்பங்கள் பாதிப்பு

12 Sep 2026, 10:14 AM
பார்வைகள்: 145
எல் நினோ தாக்கம்: 8 மாவட்டங்களில் 49,344 குடும்பங்கள் பாதிப்பு

எல் நினோ வானிலையின் தாக்கம் காரணமாக இலங்கையின் 8 மாவட்டங்களில் 49,344 குடும்பங்களைச் சேர்ந்த 161,451 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் குறித்த மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

36 பிரதேச செயலகப் பிரிவுகளில் குடிநீர் விநியோகம்

இன்று (12) காலை வெளியிடப்பட்ட பேரிடர் மேலாண்மை மையத்தின் தரவு அறிக்கையின்படி, நாட்டின் 36 பிரதேச செயலகப் பிரிவுகள் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, குறித்த 36 பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 43,221 குடும்பங்களைச் சேர்ந்த 141,312 பேருக்கு தற்போது குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.