Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

கொழும்பு வீடமைப்புத் திட்டங்களில் 40 சதவீதம் 40 ஆண்டுகளுக்கும் பழமையானவை

13 Sep 2026, 11:24 AM
பார்வைகள்: 104
கொழும்பு வீடமைப்புத் திட்டங்களில் 40 சதவீதம் 40 ஆண்டுகளுக்கும் பழமையானவை

கொழும்பு நகரில் காணப்படும் வீடமைப்புத் திட்டங்களில் சுமார் 40 சதவீதமானவை 40 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையானவை என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு நகர எல்லைக்குள் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்வகிக்கப்படும் 96 வீடமைப்புத் திட்டங்கள் காணப்படுவதாக பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.

அவற்றில் பழுதடைந்து மோசமான நிலையில் காணப்படும் வீடமைப்புத் திட்டங்களை அடையாளம் கண்டு, அவற்றைப் புனரமைப்பதற்கான வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மிகவும் பழமையான மற்றும் புனரமைக்க முடியாத நிலையில் உள்ள சில வீடமைப்புத் திட்டங்களுக்குப் பதிலாக, புதிய வீடமைப்புத் திட்டங்களை நிர்மாணிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.