Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

B.Ed. பட்டதாரிகளை உடனடியாக ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை

06 Oct 2026, 09:35 AM
பார்வைகள்: 70
B.Ed. பட்டதாரிகளை உடனடியாக ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை

ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் நிறைவு செய்யப்பட்டதன் பின்னர், கல்வியியல் இளமானி (B.Ed.) பட்டதாரிகளை உடனடியாக இலங்கை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கல்வியியல் இளமானி பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதில் நிலவும் சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பில், ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரச சேவை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்கள் மற்றும் உயர் நீதிமன்றத்தின் தொடர்புடைய தீர்ப்புகளை கருத்திற்கொண்டு, ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் தயாரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்தும் விதம் தொடர்பில் ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.