Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

ஹட்டன் நகரில் கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி விபத்து: பெண் மயிரிழையில் உயிர்தப்பினார்!

11 Oct 2026, 02:39 PM
பார்வைகள்: 120
ஹட்டன் நகரில் கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி விபத்து: பெண் மயிரிழையில் உயிர்தப்பினார்!

ஹட்டன் நகரில் தனியார் வர்த்தக நிலையம் ஒன்றின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியை, இன்று (11) காலை வேறொரு இடத்துக்கு நகர்த்த முற்பட்டபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த பாரவூர்தியை நகர்த்த முற்பட்டபோது, அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதன்போது, பாரவூர்தி அருகிலிருந்த கடையொன்றின் படிக்கட்டுகள் மீது ஏறிச் சென்று, இறுதியில் உயர் மின்னழுத்த மின்கம்பத் தூணில் மோதி நின்றுள்ளது.

விபத்து இடம்பெற்ற நேரத்தில் பெண் ஒருவர் பாரவூர்திக்கு அருகில் நடந்து சென்றுகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பாரவூர்தி கவிழ்ந்திருந்தால் குறித்த பெண் பாரிய ஆபத்தை எதிர்கொண்டிருக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது.

எனினும், இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. அதேவேளை, பாரவூர்தி பலத்த சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.