Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

ஹட்டனில் லொறி விபத்து: பிரேக்கிற்குப் பதிலாக எக்ஸிலரேட்டரை மிதித்த சாரதி!

12 Oct 2026, 11:16 AM
பார்வைகள்: 147
ஹட்டனில் லொறி விபத்து: பிரேக்கிற்குப் பதிலாக எக்ஸிலரேட்டரை மிதித்த சாரதி!

ஹட்டன் நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றை வேறு இடத்திற்கு மாற்ற முற்பட்டபோது, சாரதி தவறுதலாக எக்ஸிலரேட்டரை மிதித்ததால் ஏற்பட்ட விபத்தில் லொறி கடுமையாகச் சேதமடைந்துள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று (11) முற்பகல் 11 மணியளவில் ஹட்டன் நகரில் உள்ள தனியார் வர்த்தக நிலையமொன்றுக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.

குறித்த லொறியை வேறு இடத்தில் நிறுத்துவதற்காக சாரதி அதனை இயக்கியபோது, பிரேக்கைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக தவறுதலாக எக்ஸிலரேட்டரை மிதித்துள்ளார்.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த லொறி வேகமாக முன்னோக்கிச் சென்று அருகிலிருந்த மின்கம்பத்துடன் மோதியுள்ளது.

இந்த விபத்தில் லொறி கடுமையாகச் சேதமடைந்துள்ளதுடன், அதிர்ஷ்டவசமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

வாகனங்களை இயக்கும்போது ஏற்படும் சிறிய கவனக்குறைவுகூட பாரிய விபத்துகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்பதால், சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியமாகும்.