Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

டெங்கு பரவலுக்கு பிரதான காரணம் ஏடிஸ் ஈஜிப்டை நுளம்பு – நிபுணர் எச்சரிக்கை

18 Jun 2026, 04:02 PM
பார்வைகள்: 285
டெங்கு பரவலுக்கு பிரதான காரணம் ஏடிஸ் ஈஜிப்டை நுளம்பு – நிபுணர் எச்சரிக்கை

நாட்டில் டெங்கு நோய் பரவுவதற்கு முக்கிய காரணமாக ஏடிஸ் ஈஜிப்டை (Aedes aegypti) மற்றும் ஏடிஸ் அல்போபிக்டஸ் (Aedes albopictus) ஆகிய இரண்டு நுளம்பு இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பூச்சியியல் நிபுணர் சகுந்தலா ஜானகி தெரிவித்துள்ளார்.இவற்றில், ஏடிஸ் ஈஜிப்டை நுளம்பே டெங்கு வைரஸை மனிதர்களிடையே பரப்பும் முக்கிய நோய்க்கடத்தியாக செயல்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.டெங்கு தொற்றுகள் அதிகரிக்கும் காலங்களுக்கு முன்னரே இந்த நுளம்பு இனத்தின் எண்ணிக்கை கணிசமாக உயர்வது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஏடிஸ் ஈஜிப்டை நுளம்பிற்கு தனித்துவமான இரத்தம் உறியும் பண்பு காணப்படுவதாகவும், பொதுவாக ஒரு பெண் நுளம்பு தனது வாழ்க்கைச் சுழற்சிக்குத் தேவையான இரத்தத்தை ஒரே நபரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் என்றும் விளக்கமளித்துள்ளார்.எனினும், குறுகிய காலப்பகுதிக்குள் பல நபர்களிடமிருந்து இரத்தம் உறிஞ்சும் திறன் இந்த நுளம்புக்கு இருப்பதால், டெங்கு வைரஸால் பாதிக்கப்பட்ட நுளம்புகள் ஒரே நேரத்தில் பலருக்கு நோயை பரப்பக்கூடிய அபாயம் காணப்படுவதாக அவர் எச்சரித்துள்ளார்.இதன் காரணமாக, டெங்கு பரவலை கட்டுப்படுத்த நுளம்புகளின் இனப்பெருக்க இடங்களை முற்றிலும் அகற்றும் நடவடிக்கைகளை மக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் தீவிரப்படுத்த வேண்டும் என சகுந்தலா ஜானகி வலியுறுத்தியுள்ளார்.