Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு; நுகர்வோருக்கு சதோச நிவாரணம்

18 Jun 2026, 04:13 PM
பார்வைகள்: 293
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு; நுகர்வோருக்கு சதோச நிவாரணம்

பொதுமக்களின் வாழ்க்கைச் செலவுச் சுமையை குறைக்கும் நோக்கில், பல அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகளை இன்று (18) முதல் குறைக்க லங்கா சதோசா நடவடிக்கை எடுத்துள்ளதாக வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, விலை குறைக்கப்பட்ட பொருட்களை இன்று முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து லங்கா சதோசா விற்பனை நிலையங்களிலும் நுகர்வோர் பெற்றுக்கொள்ள முடியும்.இதன்படி, கோதுமை மாவின் விலை ஒரு கிலோகிராமுக்கு ரூ.10 குறைக்கப்பட்டு, ரூ.169 இலிருந்து ரூ.159 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பல்வேறு அரிசி வகைகளின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன. பொன்னி சம்பா அரிசியின் விலை ரூ.6-ஆலும், சிவப்பு நாடு அரிசி, சம்பா சிவப்பு அரிசி, உள்ளூர் வெள்ளை நாடு அரிசி மற்றும் வெள்ளை கெக்குலு சம்பா அரிசி ஆகியவற்றின் விலை தலா ரூ.5-ஆலும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ளை கெக்குலு அரிசியின் விலை ஒரு கிலோகிராமுக்கு ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது.இதனுடன், கொண்டைக்கடலையின் விலை ஒரு கிலோகிராமுக்கு ரூ.5 குறைக்கப்பட்டுள்ளதுடன், வெள்ளை சர்க்கரையின் விலை ஒரு கிலோகிராமுக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த விலை குறைப்பு நடவடிக்கை பொதுமக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.