Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

கொரியப் பரீட்சை விண்ணப்பதாரர்களிடம் பணமோசடி எச்சரிக்கை...!

30 Oct 2026, 02:07 PM
பார்வைகள்: 213
கொரியப் பரீட்சை விண்ணப்பதாரர்களிடம் பணமோசடி எச்சரிக்கை...!

கொரிய மொழிப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கவுள்ளவர்களை இலக்குவைத்து, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பெயரைப் பயன்படுத்தி போலி குறுஞ்செய்திகள் மூலம் பணமோசடி செய்யப்படுவதாகப் பணியகம் எச்சரித்துள்ளது.பரீட்சைக் கட்டணத்தைச் செலுத்துமாறு போலியான வங்கிக் கணக்கு இலக்கங்களை உள்ளடக்கிய குறுஞ்செய்திகள் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மோசடி நடவடிக்கை எனப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

2026ஆம் ஆண்டுக்கான கொரிய மொழிப் பரீட்சை விண்ணப்பங்கள் ஒக்டோபர் 26 முதல் 30 வரை www.slbfe.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.பணியகத்தின் பெயரிலுள்ள மக்கள் வங்கி, இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கிக் கணக்குகளுக்கு மாத்திரம் பணத்தைச் செலுத்துமாறும், சந்தேகத்திற்கிடமான குறுஞ்செய்திகளின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த 1989 என்ற துரித அழைப்பு இலக்கத்தைத் தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.