Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

முரசு சூறாவளி தீவிரமடைய வாய்ப்பு: ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை

02 Nov 2026, 03:42 PM
பார்வைகள்: 126
முரசு சூறாவளி தீவிரமடைய வாய்ப்பு: ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள “முரசு” (Murasu) சூறாவளி, அடுத்த சில மணி நேரங்களில் தீவிர சூறாவளிப் புயலாக வலுப்பெறக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. நவம்பர் 1ஆம் திகதி இரவு 11.30 மணியளவில் காங்கேசன்துறைக்கு வட-வடகிழக்கே சுமார் 480 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்த இப்புயல், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 2ஆம் திகதி நள்ளிரவு முதல் நவம்பர் 3ஆம் திகதி அதிகாலை வரை தெற்கு ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் – நர்சாபூர் இடையே கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், 10°N–17°N மற்றும் 80°E–90°E எல்லைக்குட்பட்ட ஆழ்கடல் பகுதிகளுக்கு மறுஅறிவித்தல் வரை மீனவர்களும் கடற்படையினரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.