Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

தையிட்டி விகாரைக்கு எதிராக மக்கள் போராட்டம்; பூர்வீகக் காணிகளை மீள ஒப்படைக்கக் கோரிக்கை!

09 Nov 2026, 11:51 AM
பார்வைகள்: 24
தையிட்டி விகாரைக்கு எதிராக மக்கள் போராட்டம்; பூர்வீகக் காணிகளை மீள ஒப்படைக்கக் கோரிக்கை!

யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் அமைந்துள்ள விகாரையில் இன்று திங்கட்கிழமை (09) விசேட வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்று வரும் நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்களால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

குறித்த பகுதியில் தொடரும் காணி ஆக்கிரமிப்புகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதுடன், தங்களின் பூர்வீகக் காணிகளை உடனடியாக மீளப் பெற்றுக்கொள்வதே இப்போராட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

தனியார் காணி உரிமையாளர்களின் உரிமைகள் முறையாக மதிக்கப்பட வேண்டும் என்றும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் அனைத்தும் உரிய உரிமையாளர்களிடம் உடனடியாக மீள ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

விகாரையில் விசேட வழிபாட்டு நிகழ்வுகள் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில், அதற்கு வெளியே மக்களின் எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது.