Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்: கருப்புப் பட்டி அணிந்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கவனயீர்ப்பு

08 Jul 2026, 02:47 PM
பார்வைகள்: 89
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்: கருப்புப் பட்டி அணிந்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கவனயீர்ப்பு

இன்று (8) நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின் தொடக்கத்தில், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்புப் பட்டி அணிந்து அமைதியான எதிர்ப்பில் ஈடுபட்டனர்.நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதலில் 27 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தும் வகையில் இந்த கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.இந்த எதிர்ப்பின் மூலம், சம்பவம் தொடர்பாக முழுமையான மற்றும் சுயாதீனமான விசாரணை நடத்தப்படுவதுடன், பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் எதிர்க்கட்சியினர் முன்வைத்தனர்.