Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

அமைச்சர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கான எரிபொருள் கட்டுப்பாடுகள் நீக்கம்...!

08 Jul 2026, 02:55 PM
பார்வைகள்: 276
அமைச்சர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கான எரிபொருள் கட்டுப்பாடுகள் நீக்கம்...!

அரசாங்கத்தின் செலவினங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு எரிபொருள் விநியோகத்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.இது தொடர்பான புதிய சுற்றறிக்கையை நிதி அமைச்சின் செயலாளர் அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண முதன்மைச் செயலாளர்கள், விசேட செலவீன அலகுகளின் தலைவர்கள், ஆணைக்குழுத் தலைவர்கள், திணைக்களத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டப்பூர்வ சபைகளின் தலைவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிய போர்ச் சூழலைத் தொடர்ந்து அரசாங்கத்தின் செலவினங்களை முகாமைத்துவம் செய்யும் நோக்கில், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கான எரிபொருள் கொடுப்பனவை, கடந்த மார்ச் 1 ஆம் திகதி நிலவிய எரிபொருள் விலையின் அடிப்படையில் வழங்குவதற்கு ஏப்ரல் 2 ஆம் திகதி சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.எனினும், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையின் மூலம் அந்த அறிவிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது.இதன்படி, ஜூலை 1 ஆம் திகதி முதல் அமைச்சர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கான எரிபொருள் கொடுப்பனவு மற்றும் விநியோகம், நடைமுறையில் உள்ள தற்போதைய எரிபொருள் விலையை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.