வெற்றிவாகை சூடிய ரவிகரனை வரவேற்ற முல்லைத்தீவு மக்கள்

user 16-Nov-2024 இலங்கை 1800 Views

இலங்கை தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்தில் போட்டியிட்டு வன்னிதேர்தல் தொகுதியில் வெற்றியீட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனை வரவேற்கும் நிகழ்வு முல்லைத்தீவு நகரில் இடம்பெற்றுள்ளது.

குறித்த வரவேற்பு நிகழ்வானது நேற்றையதினம் (15.11.2024) இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில், மக்களால் வெற்றியீட்டிய வேட்பாளருக்கு மாலை அணிவித்து வரவேற்பளிக்கப்பட்டதுடன் வெற்றிக் கொண்டாட்டமும் ஆரம்பமாகியிருந்தது.

இதன்போது, முல்லைத்தீவு மாவட்ட மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

Related Post

பிரபலமான செய்தி