தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் வௌ்ளத்தினால் பாதிப்பு!

user 27-Nov-2024 இலங்கை 1220 Views

இலங்கைத் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்று இடங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக அம்பாறை, ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் கடுமையான வௌ்ளநீர் தேங்கியுள்ளது.

இதனையடுத்து இன்று அதிகாலை அட்டாளைச்சேனை முன்னாள் தவிசாளர் அமானுல்லாவின் துரித முயற்சியினால் பல்கலைக்கழக பெண் மாணவிகள் ஒலுவில் ஜும்ஆ பள்ளிவாயலிலும் , ஆண் மாணவர்கள் ஒலுவில் அல் ஹம்றா பாடசாலையிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களை பாதுகாப்பாக மீட்டு வேறிடங்களில் தற்காலிகமாக தங்க வைப்பதில் பிரதேசவாசிகளும் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

இதற்கிடையே அம்பாறையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த மற்றும் உலர் உணவு விநியோகத்துக்கான ஏற்பாடுகளை இளைஞர்கள் தன்னார்வ அடிப்படையில் மேற்கொண்டுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

Related Post

பிரபலமான செய்தி