தற்காலத்தில் தமிழ் அரசியல் களம் சூடுப்பிடித்துள்ளது. ஊழல் விவகாரங்கள் மற்றும் மணல் கொள்ளையில் ஈடுபட்ட ஒருசில அரசியல்வாதிகளின் பெயர்கள் விரைவில் வெளிவரும் என அரசதரப்பு தெரிவித்துள்ள நிலையில் தமிழ் புள்ளிகள் சிலரும் சிக்குவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழ் அரசியல்வாதிகள் மனித வளச்சுரண்டல் , வரிஏற்பு , ஊழல் போன்ற நடவடிக்கைகள் மூலம் திரட்டிய பணத்தின் இலாப நட்டம் பார்க்கும் இடமாக தாயகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.சமஸ்டி, ஒரு நாடு இரு தேசம், மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி, என் கனவு தமிழீழம் போன்ற காலாவதியான வெற்று அரசியல் பேச்சுகளை இன்றும் பேசிக்கொண்டு வருகின்றனர்.
நாம் இவர்களை ஒற்றுமையாக வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பினாலும் அங்கு சென்றபின்னர் தங்கள் தனிப்பபட்ட நன்மைக்காக எமது மக்களின் அரசியல் நலன்சார்ந்து கூட்டுத்தீர்மானம் எடுக்கமாட்டார்கள் . நாடாளுமன்றத்தில் சண்டைப் பிடித்துக்கொண்டிருக்கின்றனர்.இப்போது கூட பல கட்சிகள் சிதறி ஒருவரை ஒருவர் குறை சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.இவர்கள் எவ்வாறு தாயகத்தை மீட்டெடுக்க போகிறார்கள்.?
இன்றுவரை இவர்களின் சாதனை என்ன ? பிரிவினைவாதம் , இனவாதம் ,சரியான கொள்கைகள் இல்லை, மக்கள் சமத்துவம் இல்லை. சாதியவாதம், பிரதேசவாதம், வெளிப்படையான விளக்கம் எதுவும் இல்லை, மக்களின் அடிப்படை வசதிகள் குறித்த எந்த சிந்தனையும் இல்லை. தமிழ் மக்களை அழித்தது, சொத்துக்களை அழித்தது, சர்வாதிகாரம் செய்தது, பதவி சண்டை, சுயலாபம் சேர்த்தது, மக்களுக்கு சொல்வது ஒன்று தங்கள் செய்வது ஒன்று. ஒட்டிபிழைப்பது , வழக்குகளில் வேறு சிக்கிகொள்வது என பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது. இனியும் இந்த கட்சிகள் தேவை இல்லை என்றே தோன்றுகிறது . யாழ்ப்பாண கலாசார மையம் தொடர்பாக பெரும் பிரச்சினைகள் தற்போது சென்றுக்கொண்டிருக்கும் நிலையில் அதைப்பற்றி இதுவரை எந்தவொரு தமிழ் அரசியல்வாதிகளும் குரல் கொடுக்கவில்லை .. இத்தகைய அரசியல்வாதிகள் எமக்குத் தேவைதானா?
சர்வதேச தலைவர்களையும் புலம்பெயர் அமைப்பு பிரதிநிதிகளையும் சந்திப்பதும் மட்டுமே இவர்களின் வாடிக்கையாகியுள்ளது. ஆனால் எந்தவொரு தீர்வும் எட்டப்படவில்லை. இத்தகைய கள்வர்களுக்கு பின்னால் செல்லாமல் நிலையான அபிவிருத்தி, சமூக பொருளாதார முன்னேற்றம், மனித வள அபிவிருத்தி, ஊழல் ஒழிப்பு, இன நல்லிணக்கம், பெண் சுதந்திரம் போன்றவற்றை முதன்மைப்படுத்தும் இளம் அரசியல் பிரதிநிதிகளையே மக்களாகிய நாம் பின்பற்ற வேண்டும். தாயக அரசியல்வாதிகள் எத்தகைய சுயநலவாதிகள் என்பதில் தற்போது மக்கள் தெளிந்துவிட்டனர். கடந்த தேர்தலில் கற்பித்ததை போன்று முற்றாக தாயகத்தை விட்டு வெளியேற்ற வேண்டும். இதுவே எதிர்கால தாயகத்திட்கு நாம் செய்யும் கைம்மாறு ஆகும்.