வருடங்களுக்கு பிறகு மத்திய கிழக்கில் ரஷ்யாவின் தாக்குதல்!

user 01-Dec-2024 சர்வதேசம் 1382 Views

8 வருடங்களுக்கு பிறகு மத்தியக் கிழக்கு சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவின் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

சிரியாவின் கிளர்ச்சிப் படைகள் இந்த வார தொடக்கத்தில் அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ள நிலையில், இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டிற்கு பிறகு சிரியாவின் மீது ரஷ்யாவினால் நடாத்தப்பட்ட முதல் தாக்குதல் ஆகும்.

இந்நிலையில், இந்த தாக்குதலில் இதுவரை 300 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதனால், அப்பகுதியில் சாலைகள் மூடப்பட்டுள்ளதோடு விமான நிலையமொன்றும் மூடப்பட்டுள்ளது.

சிரியாவின் கிளர்ச்சிப் படைகளுக்கும் அந்நாட்டின் அரசாங்கத்திற்கும் இடையில் நிலவி வந்த மோதலால் இட்லிப் பல வருடங்களாக போர்க்களமாக நிலவி வந்தது.

இதனையடுத்து, 2020ஆம் ஆண்டளவில், சிறிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் நெருங்கிய நண்பரான ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் கிளர்ச்சியாளர்களை ஆதரித்த துருக்கிக்கு இடையில் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டு போர்நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. 

Related Post

பிரபலமான செய்தி