குழந்தையுடன் தாய் எடுத்த விபரீத முடிவு!

user 17-Jan-2025 இலங்கை 432 Views

நுவரெலியா மாவட்டம் - மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் 4 வயது குழந்தையுடன் தாய் ஒருவர் குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்றைய தினம் (16-01-2025) மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் தாய் உயிருடன் மீட்கப்பட்டுள்ள போதிலும், 4 வயது பிள்ளையைத் தேடும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

அக்கரபத்தனை எல்பியன் தோட்டத்தை பிறப்பிடமாக கொண்ட குறித்த பெண் தலவாக்கலை தெவிசிரிபுற பிரதேசத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.

கணவனை  விட்டு 7 ஆண்டுகளாக பிரிந்து மற்றொரு நபருடன் வாழ்ந்து வந்த பெண், தனது குழந்தையுடன் நீர்த்தேக்கத்தில் குதித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த பெண் நீர்த்தேக்கத்தில் தத்தளித்துக் கொண்டிருந்ததை பார்த்த பிரதேச மக்கள் அவரைக் காப்பாற்றி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Related Post

பிரபலமான செய்தி