ஈராக்கில் 9 வயதில் திருமணம் செய்யலாம் !

user 23-Jan-2025 சர்வதேசம் 494 Views

ஈராக்கில் சிறுவர் திருமணச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டத்தின்படி இனி 9 வயது சிறுமிகளுக்கும் திருமணம் செய்து வைக்க முடியும்.

ஈராக்கில், கடந்த 1959ஆம் ஆண்டு முதல் சிறுவர் திருமணம் என்பது சட்டப்பூர்வமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது அதில் சிறிய மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது.

குறித்த சட்டத் திருத்தம், நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில்  இந்த சட்டத்தின்படி, இனி ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் 9 வயது முதல் சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கலாம். சன்னி இஸ்லாமிய பெண்களுக்கு திருமண வயது 15ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், நீதியை மேம்படுத்துவதற்கும், மக்களின் அன்றாட வாழ்க்கையை ஒழுங்கமைப்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான படிதான் இந்த சட்டம் என்று, நாட்டின் சபாநாயகர் மஹ்மூத் அல்-மஷ்ஹதானி கருத்துரைத்துள்ளார். 

Related Post

பிரபலமான செய்தி