பிரித்தானியாவின் மன்னர் சார்லஸை சந்தித்த போது உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அணிந்திருந்த உடை பேசுபொருளாகியுள்ளது.
குறித்த சந்திப்பு நேற்றைய தினம் (02.03.2025) செண்ட்ரிங்ஹாம் தோட்டத்தில் நடந்துள்ளது.
இந்த சந்திப்பு தொடர்பில் நேற்றையதினமே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, மத்திய லண்டனில் உள்ள லன்காஸ்டர் ஹவுஸில் ஐரோப்பிய தலைவர்களின் உச்சிமாநாட்டிற்குப் பிறகு ஜெலென்ஸ்கி மன்னரை சந்திக்கச் சென்றிருந்தார்.
இதன்போது, ஜெலென்ஸ்கி கோட் சூட் அணியாமல் சாதாரண உடையில் வந்திருந்ததே தற்போது பேசுபொருளாகியுள்ளது.
முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்த போதும், ஜெலென்ஸ்கி சாதாரண உடையிலேயே இருந்தார்.
இதன்போது, ட்ரம்பின் அலுவலகத்தில் இருந்த பத்திரிகையாளர் ஒருவர், 'ஜெலென்ஸ்கி இந்த அலுவலகத்தின் கண்ணியத்தை மதிக்கவில்லை' எனக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.