முல்லைத்தீவில் கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை!

user 06-Mar-2025 இலங்கை 241 Views

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நால்வர் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார்  தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களையும் புதுக்குடியிருப்பு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைதானவர்கள் மன்னாகண்டல், 10 ஆம் வட்டாரம், தேவிபுரம், சுதந்திரபுரம் , உடையார்கட்டு, வெள்ளப்பள்ளம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 30 தொடக்கம் 38 வயதிற்கிடைப்பட்டவர்கள் ஆவர்.

சந்தேக நபர்களை நேற்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்திய போது கசிப்பை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் ஒரு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஏனைய மூவரும் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

 

 

Related Post

பிரபலமான செய்தி