உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியது தமிழரசுக் கட்சி !

user 11-Mar-2025 இலங்கை 224 Views

உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

இன்று (11) மதியம் யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் குறித்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கும், இலங்கை தமிழ் அரசுக் கட்சின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளார்.

கடந்த 03 ஆம் திகதி முதல் ஆரம்பமாகிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

எனினும் எதிர்வரும் 8, 9, 13, 15, 16 ஆம் திகதிகளில் கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தேர்தல் ஆணைக்குழு (Election Commission) அறிவித்துள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப் பதிவிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் எதிர்வரும் 12 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் முடிவடையும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

பிரபலமான செய்தி