புதிய பாப்பரசர் தெரிவு உத்தியோகபூர்வ நிகழ்வு மே 07 ஆரம்பம்..

user 29-Apr-2025 சர்வதேசம் 46 Views

பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் திருத்தந்தையின் மறைவையடுத்து வெற்றிடமாகவுள்ள பதவிக்கு புதிய பாப்பரசரை தெரிவு செய்யும் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் மே மாதம் 07ஆம் திகதி நடைபெறவுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.

இம்முறை அதற்கான வாக்கெடுப்புக்காக 135 கர்தினால்கள் தகைமை பெற்றுள்ளதாகவும் வத்திக்கான் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில்  ஐரோப்பாவைச் சேர்ந்த 53 கர்தினால்களும் ஆசியாவைச் சேர்ந்த    23 கர்தினால்களும் வட அமெரிக்காவைச் சேர்ந்த 20 கர்தினால்களும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 18 கருதினால்களும் தென் அமெரிக்காவைச் சேர்ந்த 17 கர்தினால்கள் மற்றும் ஓசானியாவைச் சேர்ந்த 4 பேரும் தகைமை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 71 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி பரிசுத்த பாப்பரசருக்கான தேர்தலில் கலந்து கொள்ளும் கர்தினால்கள் 80 வயதுக்கு குறைந்தவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.வத்திக்கான் சிஸ்டைன் பேராலயத்தில் நடத்தப்படும் இந்த வாக்கெடுப்பு மிக இரகசியமாக முன்னெடுக்கப்படவுள்ளது.

Related Post

பிரபலமான செய்தி