யாழில் ஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து குழந்தைகள்....

user 26-May-2025 இலங்கை 67 Views

யாழ்.போதனா வைத்தியசாலையில் தாயொருவர் ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவமானது கடந்த சனிக்கிழமை (24) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, குழந்தைகள் தற்போது விசேட பாராமரிப்பு பகுதியில் வைத்து பராமரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டையை சேர்ந்த தம்பதியினருக்கே ஒரே சூழில் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளன.

3 ஆண் குழந்தைகளையும் 2 பெண் குழந்தைகளையும் குறித்த தாயார் பிரசவித்துள்ளார்.

இந்த நிலையில், தாயும் ஐந்து குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளதாகவும் சத்தியமூர்த்தி தெரிவித்துள்

 

Related Post

பிரபலமான செய்தி