கொழும்பு Courtyard Marriott ஹோட்டல் (Jaffna Food Festival) யாழ்ப்பாண உணவு விழாவை மே மாதம் 30ம் திகதி முதல் ஜூன் மாதம் 8ம் திகதி வரை Marriot ஹோட்டலில் மாலை 6:30 மணி முதல் இரவு 10:30 மணி வரை நடைபெறும்.
இது சம்பந்தமாக நடைபெற்ற ஊடக சந்திப்பில் Marriott ஹோட்டல் பொது முகாமையாளர் Elton Hurtis இலங்கையின் வளமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட சமையல் பாணியைக் கொண்டாடும் ஒரு நிகழ்வை நடத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம் மற்றும் யாழ்ப்பாண உணவு வகைகள் தீவின் பல கலாசார தாக்கங்கள் ஆழமாகப் போற்றப்படும் மற்றும் சுவையான வெளிப்பாடாக நிற்கின்றன என கூறினார் .
சமையல் எனது ஆழ்ந்த தனிப்பட்ட மற்றும் பழமையான நினைவுகள் வெளிப்படுத்தும் அணுகுமுறைக்கு பெயர் பெற்ற துஷாரா இன்னாசித்தம்பி, இந்த விழாவின் பின்னணியில் உள்ள உத்வேகத்தை பகிர்ந்து கொண்டார். அவருடன் இணைந்து கொண்ட தனு இன்னாசித்தம்பி உரையாற்றினார். ஆழமான நம்பகத்தன்மையை சேர்க்கும் வகையில், இந்த விழா Sheraton Kosgoda Turtle Beach Resort சேர்ந்த விருந்தினர் சமையல் காரர்களையும் வரவேற்கிறது,
இந்த நிகழ்வு, பாரம்பரியம் மற்றும் புதுமை இரண்டையும் மதிக்கும் மறக்க முடியாத உணவு விருந்தினர்களுக்கு வழங்குவதோடு, உண்மையான இலங்கை அனுபவங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும்.