யோஷித ராஜபக்ச இன்று (வெள்ளிக்கிழமை) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளனர்.
அண்மையில் யோஷிதவுக்கு திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலுக்கமைய,அவர் முன்னிலையாகவுள்ளார்.
கதிர்காமம் பகுதியில் உள்ள அரச காணியின் உரிமை தொடர்பான வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக இன்று ஆஜராகுமாறு யோஷித ராஜபக்ஷவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவும் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு விஜயம் முன்னிலையாகவுள்ளார்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நிதியமைச்சராக இருந்த காலத்தில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் முறைப்பாடு செய்ய அவர் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.