2025ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது.
ஆசிய கிரிக்கெட் பேரவை இதனை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, அபுதாபி மற்றும் துபாயில் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இடம்பெறவுள்ளது. 8 போட்டிகள் அபுதாபியிலும், 11 போட்டிகள் துபாயிலும் நடைபெறவுள்ளன.
குழு A இல் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய அணிகளும், B குழுவில் இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகள் காணப்படுகின்றன.
எதிர்வரும் செப்டெம்பர் 09ஆம் திகதி நடைபெறவுள்ள 1ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகள் மோதவுள்ளன.