அழகியல் கல்வி நிறுவனத்தில் கிளிநொச்சி மாணவி மர்ம மரணம்..

user 03-Nov-2025 இலங்கை 28 Views

கம்பளை  பெல்வுட் அழகியல் கல்வி நிறுவனத்தில் உயிரிழந்த கிளிநொச்சி மாணவியின் மரணம் தொடர்பாக கலஹா பொலிஸார் முறையான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

கிளிநொச்சி மாணவியின் உடல் சனிக்கிழமை மாலை (01) விடுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இறந்த விதுஷன் நீதி, கிளிநொச்சி கிருஷ்ணபுரத்தைச் சேர்ந்தவர். சக மாணவி ஒருவரின் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டனர்.

கொழும்பில் நடைபெற்ற ஒரு தேர்வுக்கு வந்த பிறகு, அவர் கிருஷ்ணபுரத்தில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று விடுதிக்குத் திரும்பியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மாணவி தன்னுயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர், அதேவேளை சம்பவம் நடந்த நேரத்தில் வெளியில் சென்றிருந்த சக மாணவி ஒருவருடன் அவர் அறையில் தங்கியிருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனை பேராதனை போதனா மருத்துவமனையில் நடைபெறவுள்லதுடன் கலஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post

பிரபலமான செய்தி