தற்போதைய அரசின் காலத்தில் புதிய அரசமைப்பு உருவாகாது என்றும் அது வெறும் கனவு மட்டுமே என முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசு புதிய அரசமைப்பை உருவாக்கும் என்றும், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் என்றும் அக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய அரசின் ஆட்சிக் காலத்தில்இந்தநிலையில், தேசிய மக்கள் சக்தி அரசு அதிகாரத்துக்கு வந்து நான்கு மாதங்கள் கடந்துள்ள போதிலும், இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாமை குறித்து அரசியல் தரப்பில் விவாதங்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பில் முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், "தற்போதைய அரசின் ஆட்சிக் காலத்தில் புதிய அரசமைப்பு உருவாகும் என்பது வெறும் கனவு மட்டுமேயாகும்.தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்கள் கடந்தும், இன்னும் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளைக்கூட எடுக்காமல் இருக்கின்றது.
அரசு முதலில் புதிய அரசமைப்பை உருவாக்க வேண்டுமானால், அதற்கான ஆரம்பகட்ட பணிகளைத் தொடங்க வேண்டும். ஆனால், இதுவரை எந்தவொரு நடவடிக்கைகளையும் அரசு எடுக்கவில்லை.
இப்படியான அரசு புதிய அரசமைப்பைக் கொண்டு வரும் என்று எப்படி நம்ப முடியும்? அதனால்தான் இது வெறும் கனவு என்று நான் கூறுகின்றேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.