போரை முடிவுக்குக் கொண்டுவர தயார் ஆனால்.... ஈரானிய ஜனாதிபதி நிபந்தனை!

user 12-Mar-2026 சர்வதேசம் 200 Views

போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மூன்று முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி டெஹ்ரானின் நியாயமான உரிமைகளை அங்கீகரித்தல், போருக்கான நட்டஈடு வழங்குதல் மற்றும் எதிர்கால ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக உறுதியான சர்வதேச உத்தரவாதங்களை அளித்தல் ஆகியவையே அந்த நிபந்தனைகளாகும்.

இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே போர் நிறுத்தம் சாத்தியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 10 நாட்களாக வளைகுடாவில் நிலவிவரும் போர் பதற்றங்கள் ஒட்டு மொத்த உலகையுமே பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

பிரபலமான செய்தி