இன்று முதல் அனைத்து பாடசாலைகளும் ஆரம்பம்!

user 20-Apr-2026 இலங்கை 27 Views

 இலங்கையில் அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று ( 20) மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.

அதன்படி சிங்கள மற்றும் தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கான 2026ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணையின் முதலாம் கட்டம் இன்று ஆரம்பமாகிறது.

இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளின் 2026ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் நான்காம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகிறது.

புத்தாண்டு விடுமுறையின் பின்னர் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் வழமை போன்று இன்று முதல் இடம்பெறும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related Post

பிரபலமான செய்தி