மின் கட்டண குறைப்பு தொடர்பில் புதிய தகவல்!

user 13-Nov-2024 இலங்கை 1303 Views

மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான புதிய பிரேரணையை எதிர்வரும் வாரத்தில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்க முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பான முன்மொழிவுகள் முன்னதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தனுஷ்க பராக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த பிரேரணையை மீளாய்வு செய்து கடந்த 8ஆம் திகதி சமர்ப்பிக்க வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.

இதற்கு இரண்டு வார கால அவகாசம் அளிக்குமாறு மின்சார சபை ஆணையத்திடம் தெரிவித்திருந்தது.

இதன்படி, புதிய மின் கட்டண முன்மொழிவு அடுத்த வாரம் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

 

Related Post

பிரபலமான செய்தி