ஆசிரியர் நியமனம் தொடர்பில் அரசாங்கத்தின் புதிய தீர்மானம்!

user 04-Dec-2024 இலங்கை 1364 Views

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக பிரதமர் தலைமையில் அமைச்சர்கள் குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானத்தின் பிரதான நோக்கம், அரச சேவையிலுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அதற்கொத்த சேவைப் பிரிவுகளிலுள்ள அலுவலர்களை அரச சேவையில் இணைந்து கொள்வதற்கான அடிப்படைத் தகைமைகளாக பட்டப்படிப்பைக் கருத்தில் கொள்ளாததுவிடினும், பட்டத்துடன் கூடிய அரச சேவையில் பல்வேறு பதவிகளுக்கு தற்போது இணைக்கப்பட்டுள்ள அலுவலர்கள் மற்றும் அரச சேவையில் இணைந்து கொள்வதற்கு எதிர்பார்ப்புடனுள்ள பட்டதாரிகளுக்குக் காணப்படுகின்ற பிரச்சினைகளை அடையாளங்காணல் மற்றும் தீர்வுகாணல். 

 

Related Post

பிரபலமான செய்தி